in

துப்பாக்கி 2 படம் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு படம் நிச்சயம் வரும் என்று பதிலளித்தார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

துப்பாக்கி 2 படம் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு படம் நிச்சயம் வரும் என்று பதிலளித்தார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

தனியார் இணையதள விருது வழங்கும் விழாவில் 2018-ம் ஆண்டின் சிறந்த சமூக பொறுப்புணர்வு உள்ள இயக்குநர் என்ற விருது ஏ.ஆர். முருகதாசுக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து விழாவில் பேசிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்,   ’சமூக பொறுப்புணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டும். என்னை போன்ற இயக்குநர்களுக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும். இன்றைய சூழலில் தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் சமூக பொறுப்புணர்வு இருப்பது அவசியம்’ என்றார்.

துப்பாக்கி 2 படம் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு படம் நிச்சயம் வரும் என்று பதிலளித்தார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இதைத் தொடர்ந்து கபாலி படத்தில் ரஜினிகாந்த் பேசும் ‘நான் கோட் சூட் போடுறது தான் உங்களுக்கு பிரச்னைனா நான் கோட் சூட் போடுவேன் டா, ஸ்டைலா கெத்தா’ என்ற வசனத்தை வைத்து விஜய்க்காக உருவாக்கப்பட்டிருந்த மீம் திரையிடப்பட்டது. அந்த மீம்மில் ‘விஜய் சார் கூட படம் பண்றது தான் உங்களுக்கு பிரச்னைனா.. இன்னும் 10 படம் கூட பண்ணுவேன் டா.. ஸ்டைலா .. கெத்தா..’ என்ற வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இதை பார்த்த முருகதாஸ் இது மீம் போல் தெரியவில்லை என் மைண்ட் வாய்ஸ் போல் தெரிகிறது என்றார். இதை கேட்ட ரசிகர்கள் அரங்கத்தை அதிர வைத்தனர்.

மேலும் ரஜினிகாந்துடன் இணையவிருக்கும் படம் குறித்த பேசிய முருகதாஸ், ரஜினி ரசிகன் என்ற முறையில் அது எனது கனவுப்படமாக இருக்கும். படத்தில் அரசியல் இருக்குமா என்று தெரியவில்லை ஆனால் நிச்சயம் ஒரு மாஸ் படமாக இருக்கும் என்று பதிலளித்துள்ளார். பின்னர் பறை இசைத்து அரங்கத்தில் இருந்த அனைவரையும் மகிழ்வித்தார்

Source:

https://tamil.news18.com/news/entertainment/cinema-i-will-do-many-flims-with-vijay-says-armurugadoss-98469.html

What do you think?

0 points
Upvote Downvote

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

SPIDER-MAN: FAR FROM HOME

Indian2